தேங்காய் சேமியா உப்புமா


தேவையான பொருட்கள் 

  • சேமியா 
  • தேங்காய் 
  • பெரிய வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • கடலைப்பருப்பு 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

முதலில், ஒரு கப் சேமியா வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, மூன்று காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஒரு நிமிடம் வதக்கவும். 

பின், வேக வைத்துள்ள சேமியா, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post