தேவையான பொருட்கள்
- ரவை
- தேங்காய் பால்
- சர்க்கரை
- நெய்
- ஏலக்காய்
செய்முறை
கடாயில், ½ கப் ரவை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில், ஒரு கப் தேங்காய் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள ரவை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
பின், ½ கப் சர்க்கரை, மூன்று ஸ்பூன் நெய், ¼ ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து இறுகும் வரை கிளறவும்.
