தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- தக்காளி
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில், ஒரு தக்காளி, ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில், இரண்டு கப் கோதுமை மாவு, அரைத்து வைத்துள்ள தக்காளி, ½ ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
