தேவையான பொருட்கள்
- பிரட்
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு பொடியாக நறுக்கிய நான்கு பிரட் துண்டுகள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
