தேவையான பொருட்கள்
- பூண்டு
- தேங்காய்
- சாதம்
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உளுந்து பருப்பு
- கடலைப்பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 8 பல் தட்டிய பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
