தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம்
- தேங்காய்
- காய்ந்த மிளகாய்
- புளி
- உப்பு
- கடுகு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், 10 சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், ¼ கப் துருவிய தேங்காய், சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின், கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சட்னியை தாளித்துக் கொள்ளவும்.
