தேவையான பொருட்கள்
- அவல்
- தேங்காய்
- எலுமிச்சை சாறு
- பச்சை மிளகாய்
- கடுகு
- உளுந்து பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ¼ கப் துருவிய தேங்காய், ஒரு பச்சை மிளகாய், ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் தண்ணீரில் நனைத்த அவல், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
