தேவையான பொருட்கள்
- தேங்காய்
- மிளகு
- சீரகம்
- பூண்டு
- புளி
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- தக்காளி
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், நான்கு ஸ்பூன் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு பல் பூண்டு, ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ½ ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ½ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின், ¼ டம்ளர் புளிக்கரைசல், இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
