தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி
- முருங்கைக்காய்
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- பிரியாணி மசாலா தூள்
- பிரியாணி இலை
- பட்டை
- கிராம்பு
- ஏலக்காய்
- சோம்பு
- உப்பு
- நெய்
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
- புதினா
செய்முறை
குக்கரில், நான்கு ஸ்பூன் நெய், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், ¼ ஸ்பூன் சோம்பு, ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய், நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின், நறுக்கிய இரண்டு முருங்கைக்காய், ஒரு கைப்பிடி புதினா, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு, 20 நிமிடம் ஊற வைத்த ஒரு கப் அரிசி, 1.5 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு ஒரு விசில் விடவும்.
