தக்காளி-தேங்காய் ரசம்


தேவையான பொருட்கள் 

  • தக்காளி 
  • தேங்காய் 
  • பச்சை மிளகாய் 
  • சீரகம் 
  • மிளகு 
  • பூண்டு 
  • புளி 
  • பெருங்காயத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • கடுகு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை 

முதலில், நான்கு ஸ்பூன் துருவிய தேங்காய், ½ ஸ்பூன் சீரகம், ½ ஸ்பூன் மிளகு, ஒரு பச்சை மிளகாய், ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், இரண்டு பல் தட்டிய பூண்டு, பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ½ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின்னர், ¼ டம்ளர் புளிக்கரைசல், 2 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.

Previous Post Next Post