தேவையான பொருட்கள்
- சாதம்
- மோர்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- கடுகு
- கடலைப்பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் ஒரு கப் சாதத்தில், ½ கப் மோர், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ½ ஸ்பூன், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சாதத்தை தாளிக்கவும்.
