காய்கறி ரவை பான்கேக்


தேவையான பொருட்கள்

  • ரவை 
  • மைதா 
  • தயிர் 
  • வெங்காயம் 
  • கேரட் 
  • பச்சை மிளகாய் 
  • உப்பு
  • எண்ணெய் 

செய்முறை 

முதலில், ஒரு கப் ரவை, ½ கப் தயிர், ¼ கப் மைதா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மாவாக கரைத்துக் கொள்ளவும்.

பின், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்கு ஸ்பூன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின்னர், தோசைக்கல்லில் தடிமனான தோசை போல ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post