தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- தயிர்
- பிரியாணி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- புதினா
- பட்டை
- கிராம்பு
- சோம்பு
- ஏலக்காய்
- உப்பு
- நெய்
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய், நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்தவுடன் ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, ¼ ஸ்பூன் சோம்பு, ஒரு ஏலக்காய், பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கைப்பிடி புதினா, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு 20 நிமிடம் ஊற வைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசி, 1½ கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.
