கேரட்-கடலைப்பருப்பு சட்னி


தேவையான பொருட்கள்

  • கேரட் 
  • கடலைப்பருப்பு 
  • பச்சை மிளகாய் 
  • தேங்காய் 
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை 

செய்முறை

முதலில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ¼ கப் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

வறுபட்டதும், பொடியாக நறுக்கிய ½ கப் கேரட், மேலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கேரட் மென்மையாகும் வரை வதக்கவும்.

ஆறிய பின், நான்கு ஸ்பூன் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post