கேரட்-பாசிப்பருப்பு பொரியல்


தேவையான பொருட்கள்

  • கேரட்
  • பாசிப்பருப்பு 
  • பச்சை மிளகாய்
  • தேங்காய் 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை

முதலில், ¼ கப் பாசிப்பருப்பை லேசாக வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு கப் கேரட் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

இறுதியாக, ¼ கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். 

Previous Post Next Post