தேவையான பொருட்கள்
- மீதமான உப்புமா
- கடலை மாவு
- கேரட்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
மீந்து போன ஒரு கப் உப்புமாவிற்கு ¼ கப் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ¼ கப் கடலை மாவு, தேவைக்கேற்ப தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
