உருளைக்கிழங்கு தேங்காய் பொரியல் (சுலபமாக செய்ய)


தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு 
  • தேங்காய்
  • சாம்பார் தூள் 
  • மிளகாய் தூள் 
  • உப்பு 
  • கடுகு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை

முதலில், ஒரு கப் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ¼ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கலந்துவிடவும்.

இறுதியாக, ¼ கப் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கலந்துவிட்டு இறக்கவும். 

Previous Post Next Post