தேவையான பொருட்கள்
- சிறுகீரை
- பூண்டு
- பச்சை மிளகாய்
- உப்பு
- தேங்காய் எண்ணெய்
செய்முறை
முதலில், ஒரு கப் சிறுகீரையை சுத்தம் செய்து அதனுடன் ஒரு கப் தண்ணீர், ஆறு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து, அதிகமாக உள்ள தண்ணீரை வடிகட்டி விடவும்.
வேக வைத்த கீரையை தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு மசிக்கவும்.
