முட்டை உப்புமா


தேவையான பொருட்கள்

  • முட்டை 
  • பெரிய வெங்காயம் 
  • மிளகுத்தூள் 
  • கடுகு 
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை 

செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ½ ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

பின்னர், வேக வைத்து துருவிய மூன்று முட்டை சேர்த்து நன்கு கலந்து விட்டு இறுதியாக, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.


Previous Post Next Post