தேவையான பொருட்கள்
- வாழைக்காய்
- தேங்காய்
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு வாழைக்காயை பொடியாக நறுக்கி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், வேக வைத்துள்ள வாழைக்காய், ¼ கப் துருவிய தேங்காய், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
