மோர்-மிளகாய் குழம்பு


தேவையான பொருட்கள்

  • மோர் 
  • பச்சை மிளகாய் 
  • இஞ்சி
  • மஞ்சள் தூள்
  • கடுகு
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

செய்முறை 

முதலில், ஒரு கப் மோரில் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ¼ ஸ்பூன் இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.

பின், அடுப்பை மெதுவாக வைத்து, தயார் செய்து வைத்துள்ள மோர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும். 

Previous Post Next Post