தேவையான பொருட்கள்
- சாதம்
- காலிஃப்ளவர்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ¼ ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ¼ ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ¼ ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும்.
பின், ¼ கப் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர், ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
பின், ஒரு கப் சாதம், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
