சுண்டைக்காய் துவையல்


தேவையான பொருட்கள் 

  • சுண்டைக்காய் 
  • கடலைப்பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • புளி 
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், 50 கிராம் பச்சை சுண்டைக்காயை ஒன்றிரண்டாக தட்டி தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

பின் அதே கடாயில், ஆறு ஸ்பூன் நல்லெண்ணெய், சுத்தம் செய்து வைத்துள்ள சுண்டைக்காய் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும். 

வதங்கிய பின், ¼ கப் துருவிய தேங்காய், வறுத்து வைத்துள்ள பொருட்கள், சிறிதளவு புளி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கலந்து விட்டு எடுக்கவும். 

ஆறிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.‌


Previous Post Next Post