தேவையான பொருட்கள்
- அவல்
- கருப்பட்டி
- தேங்காய் பால்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
- நெய்
செய்முறை
முதலில், ஒரு கப் அவலை 2 நிமிடம் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் அதில் ¾ கப் கருப்பட்டி சேர்த்து கருப்பட்டி கரைந்ததும், வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள கருப்பட்டியுடன் வறுத்து வைத்துள்ள அவல், ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து தட்டிய இரண்டு ஏலக்காய் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
பின், ஒரு சிறிய கடாயில் இரண்டு ஸ்பூன் நெய், பத்து முந்திரி, பத்து உலர் திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.
