இட்லி மாவு வெங்காய பக்கோடா


தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு 
  • கடலை மாவு 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை

பாத்திரத்தில், ஒரு கப் இட்லி மாவு, ¼ கப் கடலை மாவு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கெட்டியாக கலந்துகொள்ளவும்.

பின், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை பக்கோடாவாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். 

Previous Post Next Post