தேவையான பொருட்கள்
- இட்லி மாவு
- முட்டை
- மைதா
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் இட்லி மாவுடன் ஒரு முட்டை உடைத்து ஊற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ¼ கப் மைதா, இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், தயார் செய்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
