தேவையான பொருட்கள்
- சேமியா
- முட்டை
- மிளகு
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- கடுகு
- கடலைப்பருப்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் சேமியாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் ¼ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ½ ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ½ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதித்ததும் சேமியா சேர்த்து, தண்ணீர் சுண்டியதும், இரண்டு முட்டையை உடைத்து சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
