தேவையான பொருட்கள்
- சாதம்
- மைதா
- பெரிய வெங்காயம்
- மிளகாய் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் சாதத்தை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஐந்து ஸ்பூன் மைதா, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், பிசைந்து வைத்துள்ள சாதத்தை தேவைக்கேற்ப அளவுகளில் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
