தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு
- தேங்காய்
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் கடலைப்பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின், வேக வைத்துள்ள கடலைப்பருப்புடன், தேவையான அளவு உப்பு, ¼ கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்துவிடவும்.
பின்னர், கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கடலைப்பருப்புடன் சேர்க்கவும்.
