தேவையான பொருட்கள்
- அவல்
- கடுகு
- உளுந்து பருப்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் அவலை தண்ணீரில் நனைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின், நனைத்து வைத்துள்ள அவல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
