தேவையான பொருட்கள்
- அரிசி மாவு
- ரவை
- தயிர்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் அரிசி மாவு, ½ கப் ரவை, ½ கப் தயிர், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மோர் போல பதத்திற்கு கலந்து 20 நிமிடம் வைக்கவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள மாவை தோசைக்கல்லில் ஊற்றி (சாதாரண தோசை போல இல்லாமல் மாவை ஓரங்களில் இருந்து ஊற்றவும்) தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
