தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- மிளகாய் தூள்
- பிரியாணி மசாலா தூள்
- பட்டை
- கிராம்பு
- சோம்பு
- ஏலக்காய்
- தயிர்
- உப்பு
- நெய்
- எண்ணெய்
- புதினா
- கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், நான்கு ஸ்பூன் எண்ணெய், நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்தவுடன், ½ ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், நறுக்கிய மூன்று தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசிய வதக்கவும்.
பின், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த ஒரு கப் அரிசி, 1½ கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்.
