தேவையான பொருட்கள்
- பச்சரிசி
- பாசிப்பருப்பு
- மிளகு
- முந்திரி
- சீரகம்
- நெய்
- உப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
குக்கரில், 30 நிமிடம் ஊற வைத்த ஒரு கப் பச்சரிசி, ½ கப் பாசிப்பருப்பு, இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று விசில் விடவும்.
பின், கடாயில் ஐந்து ஸ்பூன் நெய், இரண்டு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் மிளகு, சிறிதளவு கறிவேப்பிலை, பத்து முந்திரி சேர்த்து தயார் செய்து வைத்துள்ள வெண் பொங்கலைத் தாளிக்கவும்.
