கருவாடு 65


தேவையான பொருட்கள்

  • கருவாடு
  • மைதா 
  • சோள மாவு 
  • அரிசி மாவு 
  • மிளகாய் தூள் 
  • மிளகுத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • இஞ்சி-பூண்டு விழுது
  • எலுமிச்சை சாறு 
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

செய்முறை

முதலில், 200 கிராம் சின்ன கருவாட்டை நன்றாக கழுவி 10 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும்.

பின், தண்ணீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் கருவாட்டை போடவும்.
அதனுடன், இரண்டு ஸ்பூன் மைதா, இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மிளகுத்தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

பின்னர், கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும், கருவாடு துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அடுப்பை மெதுவாக வைத்து பொரிக்கவும்.

இறுதியாக, பொரித்த கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும்.

Previous Post Next Post