தேவையான பொருட்கள்
- தோசை மாவு
- பெரிய வெங்காயம்
- கடலை மாவு
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில் ஒரு கப் தோசை மாவு, நான்கு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், ½ ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.
பின், பெரிய வெங்காயத்தை வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், வட்டமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தோசை மாவு கலவையில் நனைத்து எண்ணெயில் போட்டு அடுப்பை மெதுவாக வைத்து வேக வைக்கவும்.
