முட்டை 65


தேவையான பொருட்கள்

  • முட்டை 
  • மைதா 
  • அரிசி மாவு
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • எலுமிச்சை சாறு 
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை 

முதலில், நான்கு முட்டைகளை வேக வைத்துத் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில், மூன்று ஸ்பூன் மைதா, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு போல கலந்து கொள்ளவும். 

பின், தயார் செய்து வைத்துள்ள முட்டையில் இந்த கலவையைத் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், முட்டைத் துண்டுகளை எண்ணெயில் போட்டு வேக வைக்கவும். 

Previous Post Next Post