தேவையான பொருட்கள்
- சாதம்
- அரிசி மாவு
- மைதா
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் ஒரு கப் சாதத்தை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
மசித்த சாதத்துடன், மூன்று ஸ்பூன் அரிசி மாவு, மூன்று ஸ்பூன் மைதா, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ½ ஸ்பூன் துருவிய இஞ்சி, சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, ½ ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
