தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- மிளகாய் தூள்
- சோள மாவு
- இஞ்சி-பூண்டு விழுது
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில், மூன்று பெரிய உருளைக்கிழங்குகளை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின், அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
