தேவையான பொருட்கள்
- சாதம்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சீரகம்
- அரிசி மாவு
- மைதா
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில், இரண்டு கப் சாதத்தை நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ½ ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, நான்கு ஸ்பூன் மைதா, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.
பின், தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
