தேவையான பொருட்கள்
- இட்லி
- பெரிய வெங்காயம்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
பின், பொடியாக நறுக்கிய ஐந்து இட்லி, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.
