தேவையான பொருட்கள்
- சாதம்
- தக்காளி
- பூண்டு
- மிளகாய் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், பொடியாக நறுக்கிய இரண்டு பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து தக்காளி மசிய வதக்கவும்.
பின்னர், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இறுதியாக, ஒரு கப் சாதம், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
