கருவாடு சாதம்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • கருவாடு
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி
  • மிளகாய் தூள் 
  • மிளகுத்தூள்
  • பூண்டு
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை 

செய்முறை

முதலில், 100 கிராம் சின்ன கருவாட்டை கழுவி லேசாக எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.‌

பின் கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஐந்து பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், தயார் செய்து வைத்துள்ள கருவாடு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும். 

பின்னர், 1½ கப் சாதம் சேர்த்து நன்கு கலந்துவிட்டு இறக்கவும். 
Previous Post Next Post