முட்டை மசாலா சாதம்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • முட்டை
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • மிளகாய் தூள் 
  • மிளகுத்தூள் 
  • உப்பு 
  • கடுகு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை

முதலில், இரண்டு ஸ்பூன் எண்ணெய், மூன்று முட்டையை கடாயில் உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து முட்டையை பொடிமாஸ் போல செய்து எடுத்துக் கொள்ளவும். 

மற்றொரு கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின், தயார் செய்து வைத்துள்ள முட்டை சேர்த்து கிளறவும்.

இறுதியாக, ஒரு கப் சாதம் சேர்த்து கலந்துவிடவும்.



Previous Post Next Post