வெங்காய-சாதம் வடை


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • கடலை மாவு 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • மிளகாய் தூள் 
  • சீரகம் 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை

செய்முறை

முதலில், ஒரு கப் சாதத்தை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும். 

மசித்த சாதத்துடன், பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ½ ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, ¼ கப் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வடை மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். 

பின், தயார் செய்து வைத்துள்ள சாதத்தை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும். 


Previous Post Next Post