தக்காளி முட்டை தோசை குழம்பு


தேவையான பொருட்கள்

  • முட்டை 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • பூண்டு 
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • மல்லித்தூள் 
  • கடுகு 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்கு பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.‌

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்கத் தொடங்கியவுடன், மூன்று முட்டையை உடைத்து நேராக குழம்பில் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வேக வைக்கவும்.

Previous Post Next Post