தக்காளி கருவாடு குழம்பு


தேவையான பொருட்கள்

  • கருவாடு 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • பூண்டு 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள்
  • காய்ந்த மிளகாய்
  • கடுகு 
  • உப்பு
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை

முதலில், 150 கிராம் கருவாட்டை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஐந்து பல் பூண்டு சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி, 1½ ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், தேவையான அளவு உப்பு, கருவாடு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.



Previous Post Next Post