தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- பூண்டு
- புளி
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- மல்லித்தூள்
- கடுகு
- வெந்தயம்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை, 20 சின்ன வெங்காயம், ஆறு பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், இரண்டு தக்காளி, 1½ ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின், புளிக்கரைசல்(எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து எடுத்துக்கொள்ளவும்) சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
