வெண்டைக்காய் சாதம்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • வெண்டைக்காய் 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • சாம்பார் பொடி 
  • கடுகு 
  • உளுத்து பருப்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.‌

வதங்கிய பின், ஒரு தக்காளி, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பின், பொடியாக நறுக்கிய 100 கிராம் வெண்டைக்காய், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்னர், தேவையான அளவு உப்பு, ஒரு கப் சாதம் சேர்த்து நன்கு கலந்துவிடவும். 
Previous Post Next Post