ஆம்லெட் சாதம்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • முட்டை
  • பெரிய வெங்காயம் 
  • மிளகுத்தூள்
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை 

செய்முறை

முதலில், இரண்டு முட்டையை ஆம்லெட் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.‌

கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கப் சாதம், தயார் செய்து வைத்துள்ள ஆம்லெட், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும். 


Previous Post Next Post