கருவாடு துவையல்


தேவையான பொருட்கள்

  • கருவாடு 
  • பெரிய வெங்காயம் 
  • பூண்டு 
  • காய்ந்த மிளகாய் 
  • புளி 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 


செய்முறை

முதலில், 50 கிராம் சின்ன கருவாடு, நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். 

பின் கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, ஐந்து பல் பூண்டு, நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர், தேவையான அளவு உப்பு, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, வதக்கி வைத்துள்ள பொருட்கள், கருவாடு எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). 

Previous Post Next Post